News

தருமபுரி சமூக சேவை சங்கம் - ஏப்ரல் 2026

July 04, 2026
  1. கோல்பிங் இந்தியா திட்டத்தின்கீழ் சுழல்நிதி வழங்குதல் :
    5.6.2026 வெள்ளிக் கிழமையன்று கோல்பிங் இந்தியா திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும்
     சேசுராஜபுரம் - ஆரோக்கிய மாதா கோல்பிங்
    குழுவிற்கு - ரூ.100000/-
     அடைக்கலாபுரம் - கபிரியேல் கோல்பிங் குழுவிற்கு - ரூ.100000/-
     நாச்சினாம்பட்டி – தென்றல் கோல்பிங் குழுவிற்கு - ரூ.100000/-
    என மூன்று கோல்பிங் குழுக்களுக்கு மூன்று இலட்ச ரூபாய் சுழல்நிதியானது தருமபுரி சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் அருள்பணி. மரியப்பன் அவர்களால் வழங்கப்பட்டது.
  2. கோல்பிங் இந்தியா பாதுகாப்பு கொள்கை மற்றும் திட்ட தணிக்கை பயிற்சி கூட்டம்:
    கோல்பிங் இந்தியா சார்பில் கோல்பிங் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான பாதுகாப்புக் கொள்கை (

    Safeguarding policy

    ) மற்றும் திட்ட தணிக்கை (

    Project Audit

    ) தொடர்பான பயிற்சி கூட்டமானது 2026 ஜூன் 26, 27 ஆகிய இரண்டு தினங்கள் காஞ்சீபுரம் அடோல்ப் கோல்பிங் வள மையத்தில் நடைபெற்றது. நமது மறைமாவட்ட சமூக சேவை சங்கத்தின் சார்பாக கோல்பிங் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. குழந்தைசாமி அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றார்.
  3. SPSFW

     களப்பார்வையிடல்:

    SPSFW

    -விளிம்பு நிலையிலுள்ள விவசாயிகள், விளிம்பு நிலையிலுள்ள சுயஉதவிக்குழு பெண்களுக்கான வாழ்வாதார முன்னேற்ற திட்டத்தின் சார்பாக சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், சிறு-குறு விவசாயிகளுக்கான களப்பார்வையிடல் 29.06.2026 திங்கள் கிழமையன்று புதுக்கோட்டை-வம்பன் பகுதியிலுள்ள 

    KVK

    நிறுவனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நமது த.ச.சே.சங்கத்தின் சார்பில் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அந்தோணி அமல்ராஜ், கணப்பணியாளர் திருமிகு. சாலா ஆகியோருடன் பத்து விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

  4. பசிப்பிணி ஒழிப்பு ஞாயிறு - 2026 ஜூன் மாதத்திற்கான நன்கொடை விவரம்:
    பசிப்பிணி ஒழிப்பு ஞாயிறுக்காக
     தாசரப்பள்ளி-கிறிஸ்து அரசர் ஆலயம் - ரூ. 1500/-
     தேன்கனிக்கோட்டை - சேர்வைட் கான்வென்ட் - ரூ. 10,000/-
    வழங்கியதற்காக தருமபுரி சமூக சேவை சங்கத்தின் சார்பாக நன்றி!
    -அருள்பணி. மரியப்பன்
    இயக்குநர், த.ச.சே.சங்கம்