பட்டியலினத்தோர்/பழங்குடியினர் பணிக்குழு
தமிழக ஆயர் பேரவையின் பட்டியலினத்தோர்/பழங்குடியினர் பணிக்குழுவின் ஆண்டு ஆய்வு, திட்டமிடல் கூட்டம் :
இப்பணிக்குழுவின் ஆண்டு ஆய்வு, திட்டமிடல், புதுப்பித்தல், கண்காணிப்பு கூட்டமானது ஜூன் 22, 23 ஆகிய இரண்டு நாட்களும் பணிக்குழுவின் மாநில தலைவர் மேதகு ஆயர் முனைவர் ஜீவானந்தம் அவர்கள் தலைமையில் திருச்சி, ஸ்ரீரங்கம் புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இதில் மண்டல தலைவர்கள், மறைமாவட்ட செயலர்கள், இணை செயலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், மண்டல ஒருங்கிணைப்பார்கள், களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பணிக்குவின் செயல்பாடுகள், தலித் கொள்கை, 10 அம்ச திட்டம், “தீங்கிழைக்காதே” அணுகுமுறையின் முக்கியத்துவம்/ அதன் நடைமுறை பயன்பாடுகள், மறைமாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த செயல்பாடுகள், அடுத்த மூன்று மாதங்களுக்கான செயல்திட்டங்கள் குறித்து சிறப்பு அமர்வுகள் இடம்பெற்றன. நமது மறைமாவட்டத்தின் சார்பாக இணை செயலர் முனைவர். ரமேஷ், மற்றும்கணப்பணியாளர் திருமிகு. லூர்து ஆகியோர் கலந்துகொண்டனர்.