News
புலம்பெயர்ந்தோர் பணிக்குழு
July 04, 2026
புலம்பெயர்ந்தோர்/அடைக்கலம் நாடுவோருக்கான சிறப்பு திருப்பலி :
தேன்கனிக்கோட்டை மறைவட்டம், சொல்லேபுரம் சோலா பயிற்சி மையத்தில் 14.06.2026 ஞாயிற்றுக்கிழமையன்று திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இத்திருப்பலியானது பணிக்குழுவின் செயலர் அவர்களின் வழிகாட்டுதல்படி சோலா ஸ்டடி ஹவுஸ் சமூகத்தின் இல்ல தலைவர் அருள்பணி. ஏரூஸ் கிஷோர் அவர்கள் தலைமையில் அருள்சகோதரிகள் ஜெசி, சமீரா ஆகியோரின் உதவியுடன் சிறப்பாக நடைபெற்றது. இப்பலியில் 20 புலம்பெயர்ந்தோர் கலந்துகொண்டனர்.
-அருள்பணி. மரியப்பன்
இயக்குநர், தருமபுரி சமூக சேவை சங்கம்.