News

இளைஞர் இயக்குநர் பயிற்சி திட்டம்-2026

July 04, 2026

புதிதாக பொறுப்பேற்ற மறைமாவட்ட இளைஞர் இயக்குநர்களின் பயிற்சி கூட்டம் மாநில இளைஞர் இயக்க இயக்குநர் அருள்பணி. எடிசன் அவர்களின் வழிநடத்துதலில் ஜூன் 18 முதல் 22 முடிய நாகர்கோவிலில் நடைபெற்றது.
1. இளைஞர் கூட்டம், கட்டமைப்பு, வழிநடத்துதல், உருவாக்கம் குறித்து பயிற்சி கொடுக்கப்பட்டது.
2. வைசிஎஸ் /வைஎஸ்எம்  இளம் கிறிஸ்தவ மாணவர்கள், இளம் மாணவர்கள் இயக்கமும், இளைஞர் இயக்கத்தின் ஒரு அங்கமாக வளர்த்தெடுக்கவும், உருவாக்கவும், கட்டமைப்புக்காகவும், வழிநடத்தவும் பயிற்சி கொடுக்கப்பட்டது.
3. களப்பயிற்சிக்காக ஒரு பங்கிற்கு அழைத்துச் சென்று கூட்டம் நடத்திட (சிஜே முறையில்) பயிற்சிகள் இருந்தது.
4. இளைஞர் இயக்க மாநில தலைவர் மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்கள் கட்டாயம் எல்லா பங்குகளிலும் மறைமாவட்ட அளவிலும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும், கூட்டங்களை வழிநடத்த வேண்டும் என்றும் சமூகப் பொறுப்பு, சமூக நாட்டத்தை குறித்து பயிற்சிகள் தரவும் அறிவுரை தந்தார்.
5. ஜூன் மாதம் இறுதி ஞாயிறு இளம் மாணவர்கள் கொண்டாடவும் ஆகஸ்டு முதல் ஞாயிறு அன்று இளைஞர்கள் கொண்டாடவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
6. மறைமாவட்ட இயக்குநர் என்ற நிலையில் அன்பார்ந்த குருக்களே நமது கூட்டொருங்கியக்க திருஅவை செயல்திட்ட அறிக்கையின்படி இளைஞர்களை ஊக்குவிக்கவும் முன்னிலைப்படுத்தவும் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதால் முதலில் இளைஞர், மாணவர் அமைப்புகளை நமது பங்குகளில் கட்டமைக்க கேட்டுக்கொள்கிறேன்.
- அருள்பணி. ஆரோக்கியசாமி
செயலர், தருமபுரி மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு