Diocesan News

Updates, stories, and events from across the Diocese of Dharmapuri.

04 Jul
The Annual Accounts for the financial year 1 April 2025 to 31 March 2026 should be properly prepared and submitted to the Office of the Financial Administrator at the earliest. The Annual Accounts should be complete, accurate, and accompanied by all necessary supporting documents.  If you have any queries or require further details, please contact, Financial Administrator. Fr. S. Isaias Financial Administrator
04 Jul
Financial forms and account notebooks have already been distributed as booklet and digital paper to every parish, school, hostel, and institution. The purpose of this initiative is:  to safeguard all diocesan properties through proper documentation. Accordingly:  The Annual Balance Sheet and the Property Register must correspond accurately.  All movable and immovable properties should be properly recorded and updated.  Any discrepancy between the financial records and the property register should be rectified immediately. If you have any queries or require further details, please contact, Financial Administrator. Fr. S. Isaias Financial Administrator
04 Jul
This is to inform you that the Centralization Committee appointed by me will be conducting visit with parishes, schools, and hostels in the coming days as part of the ongoing efforts to strengthen coordination and ensure effective administrative functioning in the diocese. The committee is expected to visit each parish, school, and hostel individually at the Vicariate Level from 2nd of July – 4th July 2026 & 6th, & 7th, and 13th and 14th July 2026. You are kindly requested to fill the concerned financial forms and keep relevant documents: Cash Book, Ledger Book, Subscription & Dum Box Collection Book, Bank Pass Book, Mass Account Book etc., and school, hostel reconciliation statement ready for review. Your full co-operation is essential for the smooth functioning and shared mission of our diocese. If you have any queries or require further details, please contact, Financial Administrator. Fr. S. Isaias Financial Administrator
04 Jul
நமது மறைமாவட்ட குடும்பநலப் பணிக்குழு குடும்ப செபமாலை மாநாட்டை 30.05.2026 அன்று சோத்தூர், கார்மேல் தியான இல்லத்தில் நடத்தியது. மாநாட்டில் 600 பேர் கலந்துகொண்டனர். இறைவனின் அருளாலும் ஆயரின் ஆசீராலும் சோகத்தூர் கார்மேல் தியான இல்ல அருள்பணியாளர்களின் உதவியாலும் நமது மறைமாவட்ட அருள்பணியாளர்களின் தோழமையிலும் இறைமக்களின் ஒத்துழைப்பு, தாராள மனத்தாலும் நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக நடந்தேறியது. அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்பு எண் : 90471 72192 அருள்பணி. சின்னப்பன்செயலர், குடும்பநலப் பணிக்குழு
04 Jul
தருமபுரி மறைமாவட்டம் - இரண்டு ஆண்டுகளுக்கான செயல்திட்டங்கள்முதல் ஆண்டு : அனைத்து பங்குகளிலும் பெண்கள் பணிக்குழுக்களை உருவாக்குதல் மறைமாவட்ட அளவில் பெண்கள் பேரவை அமைப்பது.இரண்டாம் ஆண்டு : மேய்ப்புப்பணி பேரவைகளில்/ பங்கேற்பு அமைப்புகளில் 50 சதவீத பங்களிப்பை உறுதிசெய்து வலுப்படுத்துவது பற்றி கருத்தமர்வுகள் நடத்துவது. மறைமாவட்ட நிர்வாகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்வது. மறைமாவட்ட அளவில் ஆளுமை/திறமைமிக்க சிறந்த பெண்களை அங்கீகரித்து பொருமைப்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள்குறிப்பாக.. தனிப்பெற்றோர்களான சாதனை பெண்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி சாதனை பெண்கள் விருது வழங்குதல். அனைத்து பேரவைகளிலும் பெண்கள் பங்கேற்க செய்வதை உறுதிசெய்வது.எதிர்காலத்திற்கான திட்டம் : தனிப்பெற்றோரின், பெண் குழந்தைகளின் கல்விக்கு ஊக்கமும்/ உதவிகளும் உறுதிசெய்தல். பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து பயிற்சிகள்/ பாலியல் விழிப்புணர்வு/ சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்வது.தமிழக ஆயர் பேரவையின் பெண்கள் பணிக்குழுதருமபுரி மறைமாவட்டம்
04 Jul
கோல்பிங் இந்தியா திட்டத்தின்கீழ் சுழல்நிதி வழங்குதல் :5.6.2026 வெள்ளிக் கிழமையன்று கோல்பிங் இந்தியா திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் சேசுராஜபுரம் - ஆரோக்கிய மாதா கோல்பிங்குழுவிற்கு - ரூ.100000/- அடைக்கலாபுரம் - கபிரியேல் கோல்பிங் குழுவிற்கு - ரூ.100000/- நாச்சினாம்பட்டி – தென்றல் கோல்பிங் குழுவிற்கு - ரூ.100000/-என மூன்று கோல்பிங் குழுக்களுக்கு மூன்று இலட்ச ரூபாய் சுழல்நிதியானது தருமபுரி சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் அருள்பணி. மரியப்பன் அவர்களால் வழங்கப்பட்டது. கோல்பிங் இந்தியா பாதுகாப்பு கொள்கை மற்றும் திட்ட தணிக்கை பயிற்சி கூட்டம்:கோல்பிங் இந்தியா சார்பில் கோல்பிங் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான பாதுகாப்புக் கொள்கை ( Safeguarding policy ) மற்றும் திட்ட தணிக்கை ( Project Audit ) தொடர்பான பயிற்சி கூட்டமானது 2026 ஜூன் 26, 27 ஆகிய இரண்டு தினங்கள் காஞ்சீபுரம் அடோல்ப் கோல்பிங் வள மையத்தில் நடைபெற்றது. நமது மறைமாவட்ட சமூக சேவை சங்கத்தின் சார்பாக கோல்பிங் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. குழந்தைசாமி அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றார். SPSFW  களப்பார்வையிடல்: SPSFW -விளிம்பு நிலையிலுள்ள விவசாயிகள், விளிம்பு நிலையிலுள்ள சுயஉதவிக்குழு பெண்களுக்கான வாழ்வாதார முன்னேற்ற திட்டத்தின் சார்பாக சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், சிறு-குறு விவசாயிகளுக்கான களப்பார்வையிடல் 29.06.2026 திங்கள் கிழமையன்று புதுக்கோட்டை-வம்பன் பகுதியிலுள்ள  KVK நிறுவனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நமது த.ச.சே.சங்கத்தின் சார்பில் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அந்தோணி அமல்ராஜ், கணப்பணியாளர் திருமிகு. சாலா ஆகியோருடன் பத்து விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பசிப்பிணி ஒழிப்பு ஞாயிறு - 2026 ஜூன் மாதத்திற்கான நன்கொடை விவரம்:பசிப்பிணி ஒழிப்பு ஞாயிறுக்காக தாசரப்பள்ளி-கிறிஸ்து அரசர் ஆலயம் - ரூ. 1500/- தேன்கனிக்கோட்டை - சேர்வைட் கான்வென்ட் - ரூ. 10,000/-வழங்கியதற்காக தருமபுரி சமூக சேவை சங்கத்தின் சார்பாக நன்றி!-அருள்பணி. மரியப்பன்இயக்குநர், த.ச.சே.சங்கம்
04 Jul
முழு ஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய்...-விழிப்புணர்வு பயிற்சி :தருமபுரி மறைமாவட்ட நலவாழ்வு பணிக்குழுவின் சார்பில்,செயலர் அருள்பணி. மரியப்பன் அவர்களின் வழிகாட்டுதல்படி முழுஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய் – விழிப்புணர்வு பயிற்சிகூட்டமானது கீழ்காணும் ஒன்றியங்களில் நடைபெற்றது. தருமபுரி முழு ஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய் ... 22பாலக்கோடு முழு ஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய் ... 78பாப்பிரெட்டிப்பட்டி முழு ஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய் ... 62அரூர் முழு ஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய் ... 32ஓசூர் முழு ஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய் ... 38பர்கூர் முழு ஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய் ... 103மொத்தம் 335
04 Jul
தமிழக ஆயர் பேரவையின் பட்டியலினத்தோர்/பழங்குடியினர் பணிக்குழுவின் ஆண்டு ஆய்வு, திட்டமிடல் கூட்டம் :இப்பணிக்குழுவின் ஆண்டு ஆய்வு, திட்டமிடல், புதுப்பித்தல், கண்காணிப்பு கூட்டமானது ஜூன் 22, 23 ஆகிய இரண்டு நாட்களும் பணிக்குழுவின் மாநில தலைவர் மேதகு ஆயர் முனைவர் ஜீவானந்தம் அவர்கள் தலைமையில் திருச்சி, ஸ்ரீரங்கம் புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இதில் மண்டல தலைவர்கள், மறைமாவட்ட செயலர்கள், இணை செயலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், மண்டல ஒருங்கிணைப்பார்கள், களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பணிக்குவின் செயல்பாடுகள், தலித் கொள்கை, 10 அம்ச திட்டம், “தீங்கிழைக்காதே” அணுகுமுறையின் முக்கியத்துவம்/ அதன் நடைமுறை பயன்பாடுகள், மறைமாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த செயல்பாடுகள், அடுத்த மூன்று மாதங்களுக்கான செயல்திட்டங்கள் குறித்து சிறப்பு அமர்வுகள் இடம்பெற்றன. நமது மறைமாவட்டத்தின் சார்பாக இணை செயலர் முனைவர். ரமேஷ், மற்றும்கணப்பணியாளர் திருமிகு. லூர்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
04 Jul
புலம்பெயர்ந்தோர்/அடைக்கலம் நாடுவோருக்கான சிறப்பு திருப்பலி :தேன்கனிக்கோட்டை மறைவட்டம், சொல்லேபுரம் சோலா பயிற்சி மையத்தில் 14.06.2026 ஞாயிற்றுக்கிழமையன்று திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இத்திருப்பலியானது பணிக்குழுவின் செயலர் அவர்களின் வழிகாட்டுதல்படி சோலா ஸ்டடி ஹவுஸ் சமூகத்தின் இல்ல தலைவர் அருள்பணி. ஏரூஸ் கிஷோர் அவர்கள் தலைமையில் அருள்சகோதரிகள் ஜெசி, சமீரா ஆகியோரின் உதவியுடன் சிறப்பாக நடைபெற்றது. இப்பலியில் 20 புலம்பெயர்ந்தோர் கலந்துகொண்டனர்.-அருள்பணி. மரியப்பன்இயக்குநர், தருமபுரி சமூக சேவை சங்கம்.